வீட்டில் முன்னெப்போதும் இல்லாத ஒரு நிசப்தம் நிலவியது. விஷ்வாவின் மௌனம் அந்த வீட்டின் சுவர்களை நசுக்குவது போல இருந்தது. சிவகுரு தன் மகனின் மாற்றத்தைக் கவனித்துக் கொண்டே இருந்தார். முன்பு வேலை முடிந்து வந்ததும், தந்தையுடன் அமர்ந்து அன்றைய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் விஷ்வா, இப்போது நேராகத் தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறான்.
"விஷ்வா... உடம்பு ஏதாவது முடியலையாப்பா? ஏன் ஒரு மாதிரியா இருக்க?" என்று சிவகுரு கவலையோடு கேட்டார்.





















Write a comment ...