விஷ்வா அப்படியே திகைத்து அமர்ந்திருந்தான். அவனது கண்கள் சிவந்து, நீர் கோர்த்து நின்றன. அபிநயா அவனது தோளைத் தொட்டு ஆறுதல்படுத்த முயன்றாள், ஆனால் அவனால் எதையும் ஏற்க முடியவில்லை. சரஸ்வதி தன்னிடம் பேசுவது தன் மகன் தான் என்று தெரியாமல், "தம்பி, இதைக் கேட்டு நீங்களே என்னை வெறுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் என் கணவர் சிவகுரு... அவர் ஒரு வைரம். என்னைப் போன்ற ஒருத்திக்கு அவர் கிடைத்தது நான் செய்த புண்ணியம், அவரை இழந்தது நான் செய்த பாவம்," என்று மீண்டும் அழுதார்.
விஷ்வா மெல்ல எழுந்து நின்றான். அவனுக்கு அந்த இடத்தை விட்டு ஓட வேண்டும் என்று தோன்றியது. தன் தாயின் முகத்தைப் பார்க்க அவனுக்குக் கூச்சமாக இருந்தது. 'உன்னைச் சேர்த்து வைப்பேன்' என்று சொன்ன அபிநயா கூட, இப்போது மௌனமாக இருந்தாள். சரஸ்வதி செய்த துரோகம் அத்தகையது. விஷ்வா சரஸ்வதியிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், விறுவிறுவென்று ஆசிரமத்தின் வாசலை நோக்கி நடந்தான்.




















Write a comment ...