அன்று மாலை வானம் கருமேகங்களால் சூழ்ந்திருந்தது. மெல்லத் தொடங்கிய மழை, சிறிது நேரத்திலேயே பலத்த மழையாக மாறியது. கௌதம் அலுவலகத்தில் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் காரணமாக வர நேரமாகும் என்று மெசேஜ் செய்திருந்தான். அந்தப் பெரிய பங்களாவில் மழையின் சத்தமும், சிவக்குமாரும் அஞ்சலியும் மட்டுமே இருந்தனர்.
சிவக்குமார் ஹாலில் அமர்ந்து ஒரு பழைய இளையராஜா பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். அஞ்சலி கையில் இரண்டு கோப்பை சூடான டீயுடன் வந்தாள். அவள் இன்று ஒரு மெல்லிய லாவண்டர் நிறப் புடவை அணிந்திருந்தாள். மழையின் குளிர்ச்சிக்கு அந்த உடையின் நிறம் அவளை இன்னும் பொலிவாகக் காட்டியது.




















Write a comment ...